பக்கங்கள்

1 ஆக., 2026

10 வருஷம் ஆச்சு . ..

 ஆமா, இனி வழக்கமா எழுதுறேன்-ன்னு தான் கடைசியா போஸ்ட் போட்டேன், ஆனா என்ன பண்றது... கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனம்,  அதான் இங்க வார முடியல...

அதும் இல்லாம 10 வருஷம் gap  வேற.. அதனால கொஞ்சம் கொஞ்சமா நிறைய எழுத பாக்குறேன்,  கொஞ்சம் கொஞ்சம் எழுத்து பிழை,  ஏதும் வந்தா மனிச்சுக்குங்க... 10 வருஷம் ஆச்சு இல்லையா. மெதுவா சரி பண்றேன், 

இந்த 10 வருசத்துல என்ன எல்லாம் மாறுச்சு...

ஆயிரத்துல இருந்த சம்பளம் இப்ப லட்சமா மாரி இருக்கு ஆனாலும் இன்னமும் மாசக்கடைசி ஆனா நமக்கு இது வேணுமா வேணாமா ன்னு யோசிச்சு யோசிச்சு தான் ஆர்டர் பண்ண வேண்டி இருக்கு, M size  சட்டை போடணும்னு 2020 ல resolution  எடுத்து இப்ப L  வரை ஏறிடுச்சு, 50KG கூட இல்ல நீயெல்லாம் blood donate பண்ண முடியாதுன்னு சொன்னத கேட்டு வருத்தப்பட்டவன் இப்ப 75 க்கு இருக்கே-னு உடம்பை (actually  weight ) குறைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.  recruitment ல இருந்து WORKDAY க்கு மாறிட்டேன்  இப்ப வரை அதுல தான் பொழப்பு ஓடுது. consulting ல இருந்தவன், இப்ப வரை core product  கம்பெனி ல வேலை செய்யுரேன். வேற என்ன சொல்றது இடைல வெளிநாட்டு ல கூட கொஞ்ச நாள் போய்  வேலை செய்ஞ்சுட்டு வந்தாச்சு, 

சொந்த வாழ்க்கைல பெருசா நடந்தது சொல்லனும்னா... சொந்தமா வீடு கட்டியாச்சு, அப்பாவுக்கு retirement  ஆகிடுச்சு, பலநாள் கனவான PlayStation5 வாங்கியாச்சு, சொந்தமா ஒரு 2 wheeler  வாங்கி அப்பாவுக்குன்னு குடுத்தாச்சு, எனக்கு ஒரு OLA வண்டி வாங்கிட்டு பெங்களூரு ல வைச்சு இருந்தேன் அப்பறம் வெளிநாடு போறதால வீட்டுக்கு parcel பண்ணி அனுப்பியாச்சு.  இப்ப வீட்டுல 2 வண்டி இருக்கு, நான் இங்க பெங்களூரு ல வேலைக்கு தினம் UBER / OLA  போட்டு தான் போயிட்டு இருக்கேன். 

கொஞ்சம் கொஞ்சமா தினம் இல்லாட்டி கூட வாரத்துல 5 போஸ்ட் போடுற மாதிரி எழுதுற பழக்கத்தை கொண்டு வர பாக்குறேன். 


10 வருசமா இல்லாத ஞானோதயம் இப்ப என்ன ன்னு கேக்காதீங்க -- 

அக்கா பொண்ணு english ல blog  எழுத ஆரம்பிச்சா, நாமளும் ஏதோ பண்ணிட்டு இருந்தோமே அப்படின்னு சொல்ல போக ,  அப்போ நீங்களும் எழுதுங்க ன்னு சொன்னாங்க . . சரின்னு முயற்சி பண்ணி பாக்கலாம்னு எழுத ஆரம்பிச்சு இருக்கேன் ,  பாப்போம் இது தொடருதா இல்ல இதும் போன வட்டி ஆனா மாதிரி பாதிலேயே நிக்குதான்னு...


அப்பறம் பழைய போஸ்ட் எல்லாம் கொஞ்சம் clean பண்ணி என்னோட பார்வைகளை மட்டும் வைச்சுட்டு மத்தத எல்லாம் unpublish பண்ண போறேன் ,  அதனால் 100வது போஸ்ட் ன்னு இருக்குறது 5வது இல்ல 6வது போஸ்ட் ஆஹ் இருந்தா கலைக்க வேணாம் .  


இப்போதைக்கு இது போதும் நாளைக்கு பாக்கலாம் . 

Total Pageviewers (Last week)