பக்கங்கள்

1 நவ., 2013

'பொக்கிஷ'மாகும் பழைய புத்தகங்கள் !!!

கடந்த ஞாயிறு மாலையில்  ”புத்தகத் தாத்தா” திரு முருகேசன் அய்யா அவர்களை சந்திரசேகரன் அய்யாவுடன் சென்னையில் சந்தித்தோம், தன் தள்ளாத வயதிலும் இரு கையிலும் புத்தகங்கள் வாங்கி பையில் சுமந்து கொண்டு வந்தார், அவர் தான் கல்லாது போனாலும் நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உழைத்து தான் வாழ்வேன் என்ற பிடிவாதவும் உள்ள இவர் உண்மையிலேயே ஏணி தான்.


தீர விசாரித்ததில் சுமார் 50 புத்தகங்கள்,மிகவும் பழையது எனவும், அதை எங்களுக்கு மின்னாக்கம் செய்தபின்னர் திருப்பித் தந்துவிடவேண்டும் அல்லது எதேனும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றார். சிறிது யோசனைக்குப் பின், யாருக்கும் பணத்துக்கு விற்றதில்லை ஆனால் உங்களுக்குத் தரலாம் என்று தோணிற்று.” என்றார்!  போனசாக, சுத்தானந்தரின் 15 புத்தகங்கள் இருப்பதாகவும் அதை தருவதாகவும் சொன்னார். 


கொஞ்சம் உரையாடல் நீடித்ததில் ஒரு கசப்பான உண்மையை சொன்னார். அவருக்கு யாரும் வீடு தர மறுப்பதாகவும், அப்படித் தந்தாலும் சில மாதங்களில் விரட்டி விடுவதாகவும் சொன்னார். அவரது 20,000 புத்தகங்கள் மற்றும் அவர் நிரந்தரமாக புத்தங்கங்களுடன் அதை பராமரித்து, ஒரு லைப்ரேரியன்போல் அவற்றுடனே இருந்து தனது கடைசி மூச்சு உள்ளவரை வாழவேண்டும் என்று சொன்னார். தற்போது புத்தகங்களுடன் வெளியேற்றப்பட்டதால், ஒரு மாடிப்படியின் கீழ் அவற்றை வைத்துள்ளதாகவும் சொன்னார்.
அவருக்கு வழி செலவுக்கும், மதுரை செல்ல பேருந்துக்கும் பணம் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம் சந்திரா அய்யாவுடன்.
நம்மால் முடிந்தவரை இவருக்கான அடிப்படை உதவிகள் செய்தால் கிடைப்பதற்க்கு அறிய புத்தகங்கள் பாதுகாக்கப்படும்.

புத்தகத்தாத்தாவின் பெயர்: முருகேசன், கைபேசி எண்: 9578797459. 

Inline image 1

Inline image 2

-------

தமிழில் கிடைப்பதற்கரிய, 20 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பதுடன், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்களுக்கும் உதவும், முருகேசன்: நான், மதுரையில் உள்ள, தண்டலம் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். வயிற்று பிழைப்பிற்காக, பலசரக்கு கடையோடு, பழைய பேப்பருக்கு வெள்ளை பூண்டு விற்று, வியாபாரம் நடத்தினேன். பழைய பேப்பருக்கு வந்த சில நல்ல தமிழ் புத்தகங்களை, சேர்த்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். இன்று, நான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும். புத்தகங்களை, மற்றவர் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக, கட்டணம் வசூலிப்பது இல்லை. இதுவரை எக்காரணத்தாலும், என்னிடம் உள்ள புத்தகங்களை விற்றது இல்லை. ஏனெனில், என்னை பொறுத்தவரை, புத்தகங்களை, 'பொக்கிஷ'மாக கருதுகிறேன். இக்காலத்தில், 'கம்ப்யூட்டர்' தான் எல்லாம் என, நினைக்கின்றனர். ஆனால், கம்ப்யூட்டரால் எல்லா புத்தகங்களையும் கொடுக்க முடியாது. புத்தகம் வழியாக படிப்பதன் சுகமே தனி தான். புத்தகங்களை திருப்பி தராதவர்களிடம், 50 பைசா அஞ்சல் அட்டையில், 'மழை, வெயில் பார்க்காமல், உண்ணாமல், உறங்காமல், புத்தகங்களை தேடி அலைகிறேன். இந்த வயதான தாத்தாவை ஏமாற்றாதே' என, கடிதம் எழுதி அனுப்புவதால், புத்தகங்கள் திரும்பி வந்துவிடும். என்னிடம் உள்ள பல அரிய தமிழ் புத்தகங்களை படித்து, பல கல்லுாரி மாணவர்கள், தமிழ் இலக்கியத்தில் ஆய்வு கட்டுரைகளை தயாரித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலை கழக ஆய்வு மாணவர்களுக்கு, அதிக அளவில் புத்தகம் கொடுப்பதால், அவ்விடமே எனக்கு நிரந்தர முகவரியாக மாறியது. மதுரை வானொலி நிலையம் வழியாக, புத்தகம் வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர், திருமலை எழுதிய புத்தகத்தை, என் நீண்ட கால புத்தக சேவையை பாராட்டும் விதமாக, எனக்கு சமர்ப்பணம் செய்தார். தொடர்புக்கு: 95787 97459



Nandri Tamil nanbargal groups

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Total Pageviewers (Last week)