பக்கங்கள்

16 நவ., 2013

”உன்னை அறிந்தால்”..


ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும், நம் நிறுவன வளச்சிக்கும் இடையூராக இருந்த ஒருவர் திடீரென்று இன்று அதிகாலையில் காலமாகிவிட்டார்.

அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல்

கலந்து அவருக்கு இறுதி மரியாதை செய்யவும் என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அனைவருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தாலும்,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.

சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர் யாராக இருக்கும்,

நல்ல வேளை அவன் இறந்துவிட்டார் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது.

சவப்பெட்டியை யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...

”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்.

நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில்

மட்டுமே உள்ளது.

உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு

யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற

முடியாது.உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.

நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள்

வாழ்வை மாற்ற முடியும்.

”The world is like a mirror”.

It gives back to anyone the reflection of the thoughts in

which one has strongly believed.."

ஆம்,நண்பர்களே.,

ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள்

தன்னம்பிக்கையே காரணம்...

உங்களைத் தவிர உங்கள் முன்னேற்றத்தை யாராலும்

தடுக்க முடியாது...

தன்னம்பிக்கை கொள்வோம்.,

தரணியை வெல்வோம்.,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Total Pageviewers (Last week)